பக்கங்கள்

பக்கங்கள்

23 பிப்., 2020

கிளிநொச்சியில் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம்

தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று கிளிநொச்சியில் நடைபெறுகிறது.தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் கிளிநொச்சி தமிழரசுக்கட்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் இன்று காலை 10.45 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், ஸ்ரீநேசன், சரவணபவன், சிறீதரன், சிவமோகன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, துரைரட்னசிங்கம் மற்றும் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

எனினும், தமிழரசுக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், யோகேஸ்வரன், இதுவரை கலந்து கொள்ளவில்லை.

இரண்டு தேர்தல்கள் நடைபெற உள்ளமையால் இக் கூட்டத்தில் வேட்பாளர்கள் தொடர்பிலும் மற்றும் முக்கியமான சில முடிவுகளும் எட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.