பக்கங்கள்

பக்கங்கள்

10 பிப்., 2020

வெலிக்கடைச் சிறையில் அரசியல் கைதி ஆனந்தசுதாகரனையும் ஜனாதிபதி சந்திருந்தார் - தமிழ் அரசியல் கைதிகளையும் சந்திப்பு

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.
கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.

வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு இன்று மாலை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன் அறிவித்தலின்றி கண்காணிப்புக்காகச் சென்றிருந்தார். அங்குள்ள நிலைமைகளை ஜனாதிபதி ஆராய்ந்து வருகிறார்.

அங்கு தண்டனை பெற்ற மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை அவர் சந்தித்தார்.ஜனாதிபதியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் சென்றிருந்தார்.

இந்நிலையில் தண்டனை பெற்று சிறையிலுள்ள முன்னாள் போராளியும் அரசியல் கைதியுமான ஆனந்தசுதாகரனையும் ஜனாதிபதி சந்திருந்தார்.