பக்கங்கள்

பக்கங்கள்

23 பிப்., 2020

புங்குடுதீவு மடத்துவெளியில் இராணுவத்தினர்  சோதனை 
தமிழர் பகுதிகளில்  அண்மைக்காலமாக   தொடங்கியிருக்கும் இராணுவ சோதனை தடைகளை தொடர்ந்து புங்குடுதீவில் மடத்துவெளி ஊரதீவு சந்தி பிரதான வீதியில்  இரவு வேளைகளில் தடைகளை  வைத்து இராணுவத்தினர்  சோதனைகளில் ஈடுபட்டுவருகின்றனர் .அத்தோடு  இரவு வேளைகளில்  இ றுபிட்டி  கேரதீவு ஊரதீவு மடத்துவெளி  வீதி , மடத்துவெளி  குறிகாட்டுவான்  வீதி  ,இறுபபிட்டி பெருங்காடு வீதிகளில்  ரோந்து பணிகளில்   ஈ டுபடுகின்றனர் இந்த சோதனை  நடவடிக்கைகள்  பொதுமக்களுக்கு   அவஸ்த்தையை கொடுத்த போதும் சமூக விரோத செயல்களில்  ஈ டுபடுவோருக்கு  பெரும் தலையிடியை உண்டுபண்ணியுள்ளது கள்ள மாடு  வெட்டுதல் கடத்துதல் மதுபோதையில்  சமூக விரோத செயல்களில் ஈடுபடல் .குடியில்லாத வீடுகளில் பொருட்களை பிடுங்கி  வி ற்போர் .போன்ற சமூக விரோத செயல்பட்டுகளுக்கு  தடையாக உள்ளன