பக்கங்கள்

பக்கங்கள்

14 பிப்., 2020

திருமணமாகிய இரண்டு நாட்களுக்குள் உயிரிழந்த மனைவி! வவுனியாவில் சோகம்
வவுனியா- முருகனூர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் முருகனூரை சேர்ந்த தர்சினி (வயது 25) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

பெண்ணும் அவரது கணவரும் முருகனூர் பகுதியில் அமைந்துள்ள தமது வீட்டிலிருந்து சிதம்பரபுரம் நோக்கி முச்சக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி அருகில் இருந்த மதிலுடன் மோதியதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் காயமடைந்த கணவன் மற்றும் மனைவி அம்பூலன்ஸ் வாகனம் மூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி மனைவி உயிரிழந்துள்ளார்.

இவர்கள் இருவருக்கும் கடந்த இருதினங்களிற்கு முன்னரே திருமணம் செய்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பாக சிதம்பரபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.