பக்கங்கள்

பக்கங்கள்

5 பிப்., 2020

தமிழரசுக்கட்சியால் விலக்கப்படட வியாழேந்திரனின் பா உ .பதவி மட்டும் இன்னும் ஏன் நீடிக்கிறது ?வேறொருவரை நியமிக்கதா மர்மம் என்ன ?
மைத்திரியின் குத்துக்கரணத்தால் ரணிலை நீக்கி மகிந்த பிரதமராக நியமிக்கப்பட்டதையடுத்து கட்சி கட்டுப்படடையும் மீறி
மகிந்த பக்கம் தாவிய வியாழேந்திரனை தமிழரசுக்கட்சி நீக்கி இருந்தது .இருந்தும் இவரை இத்தனை நாளாகியும் இவரது பா உ பதவியை பறித்து இன்னொரு கட்சி சார்ந்தவரை பா உ ஆக்காமல் இழுத்தடிப்பது ஏ ன் என்ற கேள்வி மக்களிடையே பெரும் விசனத்தை உண்டு பண்ணிவருகிறது அண்மை செய்திகளின் படி தேர்தல் ஆகஸ்ட் வரை வராது என்ற கோணத்தில் பார்த்தாலும் இன்னொருவர் கட் சிக்காக பா உ ஆகி உழைக்க வழி வகுக்கும் அல்லவா கட்சியின் பல முக்கியஸ்தர்களின் எண்ணப்படி கே வி தவராசாவை இந்த இடத்துக்கு நியமித்தா ல் அவரது எதிர்காலத்துக்கான கட்சி செயல்பாடுகளுக்கு இன்னும் கூடுதல் ஊக்கத்தை கொடுக்கும் என்ற சிபார்சினை கூட தட்டிக் கழித்து வருகிறது தமிழரசுக்கட்சி இல்லாவிடினும் வியாழேந்திரன் புளொட் ஐ சேர்ந்தவர் என்று நோக்கினால் ப்ளோடடை கேட்டிருக்கவேண்டும் ஒருவரை இனம் காட்டும்படி எதுவுமே இல்லாமல் வியாழேந்திரனை பதவிக்காலம் முடியும் வரை விட்டு வைப்பது அவரது இமேஜை வளர்க்கவும் பதவியை வைத்து அவர் தனது செல்வாக்கையும் சலுகையை அனுபவித்து அடுத்த தேர்தலுக்கான மாற்றுக்கட்சிக்கு பா உ ஆகும் வாய்யப்புக்கு வழி தேடவும் உதவும் என்ற சிந்தனை என் தமிழரசுகட்சிக்கோ கூட்டமைப்புக்கோ இதுவரை தோன்றவில்லை சமசமாஜ கட்சியின் ஜயம்பதி விக்கிரமரட்ண MP பதவியை ராஜினாமா செய்த ஒரே வாரத்திற்குள் இன்னொருவரை நியமித்துள்ளது UNP . இதுதான் அவர்களது ஆளுமை . ஆனால் வியாழேந்திரனை நீக்குவதாக ஒன்றரை வருடங்களாக கூறிவரும் தமிழரசுக்கட்சி வெறுமனே வாளாதிருக்கிறது .