பக்கங்கள்

பக்கங்கள்

26 பிப்., 2020

சிறீலங்கா முடிவை மனித உரிமைகள் பேரவையில் இன்று அறிவிக்கவுள்ளது

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 43 வது அமர்வில் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று உரையாற்றவுள்ளார்.
மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்திலிருந்து இலங்கை விலகிய அறிவிப்பை இதன்போது உத்தியோகபூர்வமாக அறவிப்பார்.
இதேவேளை, ஐ.நா பிரேரணையிலிருந்து சிறீலங்கா விலகினாலும், சர்வதேச சமூத்தை சமரசம் செய்யும் விதமான சில அறிவிப்புக்களை விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐந்து விவகாரங்களை உள்ளடக்கிய புதிய திட்டமொன்றை தினேஷ் இன்று அறிவிக்கலாமென தெரிவிக்கப்படுகிறது.

நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறையின் மூலம் நிலையான அமைதியை அடைவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு உள்நாட்டில் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என தெரிவிப்பார் என நம்பப்படுகிறது.
இலங்கையின் பொறுப்புக்களுக்கு ஏற்ப ஜனநாயக மற்றும் சட்ட வழிமுறைகள் மூலம் இதுவரை தீர்க்கப்படாத பிரச்சினைகளை தீர்ப்பது மற்றும் ஐ.நா. உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் சர்ச்சைக்குரிய தீர்மானத்தை முடிவுக்குக் கொண்டுவரும் யோசனையையும் முன்வைப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது