பக்கங்கள்

பக்கங்கள்

25 மார்., 2020

சுவிஸ் - 10’000 ற்கும் மேற்பட்டோரிற்கு கொறோனா . தடுக்கும் முறையில் குறைபாடா ?ஊடரங்கு அறிவிக்கபடவேண்டுமா ?.


26.03.20 (இன்று) காலை வரை சுவிற்சர்லாந்தில் மொத்தம் 10’000 ற்கும் மேற்பட்டோரிற்கு கொறோனா என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது வரை கொறோனா மூலம் 131 பேர் இறந்துள்ளனர். இறந்தவர்களின் எண்ணிக்கைக்கு சமமாகவே இது வரை 131 பேர் குணமடைந்துள்ளனர். தற்போதைய நிலமையின் படி சுவிஸ் உலகில் கொறோனா தொற்றேற்பட்டவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் எட்டாவது இடத்தில் இருக்கின்றது!”



அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருத்துவ அலுவலைத்தவிர்த்து ஏனைய விடயங்களிற்கு வெளியே செல்ல வேண்டாம் என்று சுவிஸ் அரசு அழைப்பாணையிட்டதை பெரும்பாலான மக்கள் கடைப்பிடிக்கின்றனர். எனினும் சிலர் கடைப்பிடிக்காதமையின் காரணமாக காவற்துறை தினமும் தண்டம் அறவிடப்படும் செயலை மேற்கொண்டு வருகின்றது.

சுவிஸ் கூட்டாட்சி அரசு ஊடரங்கு உத்தரவை இன்னும் அறிவிக்கவில்லை. எனினும் இதனைப்பற்றி விரைவில் ஊடக மாநாட்டில் முடிவெடுக்கப்போகின்றோம், என தெரிவித்தனர்.