பக்கங்கள்

பக்கங்கள்

12 மார்., 2020

அவதானம்! - இல்-து-பிரான்சுக்குள் வேகமாக பரவும் கொரோனா

கொரோனா வைரசினால் இதுவரை 48 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இல்-து-பிரான்ஸ் மாகாணத்துக்கு கொரோனா தொற்று கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று புதன்கிழமை மாலை வெளியான தகவல்களின் படி, இல்-து-பிரான்ஸ் மாகாணத்துக்கு 523 கொரோனா தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக நேற்று ஒரே நாளில் 92 தொற்றுக்கள் இல்-து-பிரான்சுக்குள் கண்டறியப்பட்டுள்ளன. இங்கு ஒரே நாளில் கண்டறியப்பட்ட அதிகூடிய கொரோனா தொற்று இதுவாகும்.
பரிசுக்குள் 80 பேர் தற்போது சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும்,
Seine-et-Marne மாவட்டத்தில் 30 பேரும்,
Yvelines மாவட்டத்தில் 56 பேரும்,
Essonne மாவட்டத்தில் 20 பேரும்,
Hauts-de-Seine மாவட்டத்தில் 47 பேரும்,
Seine-Saint-Denis மாவட்டத்தில் 29 பேரும்,
Val-de-Marne மாவட்டத்தில் 36 பேரும்,
Val-d'Oise மாவட்டத்தில் 59 பேரும்
தற்போது சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இத்தகவலை மாகாண சுகாதார அமைப்பு நேற்று மாலை வெளியிட்டுள்ளது.
தவிர, இல்-து-பிரான்சின் பல மாவட்டங்களில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், பல பொது நிகழ்வுகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.