பக்கங்கள்

பக்கங்கள்

14 மார்., 2020

அங்கஜனின் சட்டவிரோத அலுவலகம் இழுத்து மூடப்பட்டது

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் சட்டத்திற்கு புறம்பாக இயங்கிய அங்கஜன் இராமநாதனின் மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலகம் அரச அதிபரின் பணிப்புரைக்கு அமைய இழுத்து மூடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் ஒருங்கிணைப்புச் செயலகம் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக இருந்த அங்கயன் இராமநாதனால் இயக்கப்பட்டது. ஆனால், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் இதன் பணிகளை நிறுத்துமாறு தேர்தல் ஆணைக்குழு பணிப்புரை விடுத்தது.

இருந்தபோதும் தேற்றைய தினமும் மாவட்டச் செயலகத்தில இருந்த குறித்த அலுவலகம் இயங்குவது மாவட்டச் செயலாளரும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருமான கணபதிப்பிள்ளை மகேசனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதை அடுத்து அது மூடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மாவட்ட செயலாளர் தெரிவிக்கையில், குறித்த அலுவலகத்தை தேர்தல் முடியும் வரையில் இயக்க வேண்டாம் என ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. தொடர்ந்தும் இயங்கியதால் மூடி சீல் வைக்கப்பட்டது. – என்றார்.