பக்கங்கள்

பக்கங்கள்

3 மார்., 2020

வேகமாகப் பரவும் கொரோனா வைரஸ்

அண்மையில் கொரோனா வைரஸ் தொற்றுநோயானது புதிய தொற்று இலக்கமாக «COVID-19» என உலக சுகாதார மையத்தினால் பெயரிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவும் இந்தத் தொற்று நோயானது பிரான்சிலும் மிக விரைவாகப் பரவ ஆரம்பித்துள்ளது.பெப்ரவரி 29ம் திகதி 100 பேரிற்குப் பிரான்சில் கொரோனா தொற்று இருப்பது கணக்கெடுக்கப்பட்டது. ஆனால் இன்று மார்ச் முதலாம் திகதி, அதாவது ஒரே நாளில் இந்தத் தொகையானது 130 ஆக உயர்ந்துள்ளது.
இதில் இருவர் உயிரிழந்துள்ளனர். 12 பேர் சிகிச்சை அளிக்கப்பட்டு நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். 116 பேர் தொடர்ந்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.இல்-து-பிரான்சின் பல பகுதிகளில் இந்த நோய்த்தொற்று பரவத் தொடங்கியமை பெரும் எச்சரிக்கை நிலையை ஏற்படுத்தி உள்ளது