பக்கங்கள்

பக்கங்கள்

21 மார்., 2020

இலங்கையில் நாளிதழ்கள் அச்சிடுவது இடைநிறுத்தம்

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இலங்கையில் நாளிதழ்கள் அச்சிடப்படுவது இன்று தொடக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இலங்கையில் நாளிதழ்கள் அச்சிடப்படுவது இன்று தொடக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் மிரர் டெய்லி மிரர், டெய்லி எப்டி, சண்டே டைம்ஸ், லங்கதீபா உள்ளிட்ட நாளிதழ்கள் மற்றும் வார இதழ்களை வெளியிடும் விஜய நிறுவனமும், டெய்லி நியூஸ், சண்டே ஒப்சர்வர், தினகரன், தினமின, சிலுமின போன்ற இதழ்களை வெளியிடும் லேக் ஹவுஸ் நிறுவனமும் அச்சிடும் பணிகளை திங்கட்கிழமை வரை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளன.

வீரகேசரி, தினக்குரல், உதயன், வலம்புரி, காலைக்கதிர், போன்ற தமிழ் நாளிதழ்களும் அச்சிடும் பணிகளை நிறுத்தியுள்ளன.

இதனால் இன்று காலை எந்த நாளிதழ்களும் அச்சிட்டு வெளியிடப்படவில்லை. சில ஊடக நிறுவனங்கள் மின் இதழ்களை வெளியிடுகின்றன. சிலவற்றின் இணையத் தளங்களில் செய்திகள் பதிவேற்றப்படுகின்றன