பக்கங்கள்

பக்கங்கள்

24 மார்., 2020

கொரோனா தாக்கம் - ஸ்பயினில் முதியோர்கள் பலர் உயிரிழப்பு

ஸ்பயினில் தனிமையில் கைவிடப்பட்ட முதியோர்கள் பலர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

ஸ்பைன் இராணுவத்தினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே, அவர்கள் அடையாளங் காணப்பட்டதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

கொரோனாவின் தாக்கத்தினால் முதியோர்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில், ஸ்பைனில் முதியோர் இல்லங்களில் இருந்து பலர் வெளியேறியுள்ளனர்.

இந்த நிலையில், அவர்களை கண்டுபிடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே, பலர் உயிரிழந்த நிலையில் கண்டடுக்கப்பட்டுள்ளனர்.