பக்கங்கள்

பக்கங்கள்

3 மார்., 2020

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலைஇலங்கையை விட்டு ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்

இலங்கையயில் அரச காப்பீட்டு பத்திரங்களில் முதலீடு செய்திருந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வேகமாக வெளியேறி வருவதால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இலங்கையயில் அரச காப்பீட்டு பத்திரங்களில் முதலீடு செய்திருந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வேகமாக வெளியேறி வருவதால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதிக்கும் 26 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட ஒரு வார காலத்தில் அரச காப்பீட்டு பத்திரங்களில் முதலீடு செய்திருந்த 11.42 பில்லியன் ரூபாவை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் திரும்ப பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின் படி, 2020 பெப்ரவரி 19 ஆம் திகதி வரை அரச காப்பீட்டு பத்திரங்களில் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 664 மில்லியன் ரூபா பணத்தை வெளிநாட்டினர் முதலீடு செய்திருந்தனர். அந்த தொகையானது பெப்ரவரி 26 ஆம் திகதி 91 ஆயிரத்து 240 மில்லியன் ரூபாவாக குறைந்துள்ளது.

ஒரு வார காலத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 11 ஆயிரத்து 424 மில்லியன் ரூபாவை திரும்ப பெற்றுள்ளனர். இதனால் இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.