பக்கங்கள்

பக்கங்கள்

23 மார்., 2020

மீண்டும் ஊரடங்கு சட்டம் நீடிப்பு

இன்று ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பகுதிகளில் பிற்பகல் இரண்டு மணியிலிருந்து எதிர்வரும் 26ஆம் திகதி வியாழக்கிழமை காலை 6 மணி வரை மீண்டும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளதாக சிறீலங்கா அதிபர் அலுவலக ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

குறித்த பகுதிகளில் 26ஆம் திகதி வியாழக்கிழமை பகல் 12 மணியிலிருந்து மீண்டும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படும் என ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை காலை 6 மணிக்கு நீக்கப்படவுள்ளது.

குறித்த 8 மாவட்டங்களிலும் நாளை பகல் 12 மணியிலிருந்து 27ஆம் திகதி வௌ்ளிக்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என அறிவித்துள்ளது.

இந்த மாவட்டங்களில் 27ஆம் திகதி நண்பகல் 12 மணியிலிருந்து மீண்டும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளது.

மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து நாடளாவிய ரீதியில் தடை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், சுற்றுலாப் பயணிகளை ஆங்காங்கே அழைத்துச்செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுகின்ற காலப்பகுதியில் அனைத்து மாவட்டங்களிலும் விவசாய செய்கையில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மரக்கறி வகைகளை வாகனங்களில் ஏற்றிச்செல்லவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

விவசாய மற்றும் வர்த்தக துறைகளுக்குப் பொறுப்பான அமைச்சர் இந்த விடயங்களை முறையாக நிர்வகிக்க வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளதாகவும் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது