பக்கங்கள்

பக்கங்கள்

7 மார்., 2020

மனித உரிமை ஆணைக்குழுவில் இருந்து விலகினார் அம்பிகா! - கூட்டமைப்பில் போட்டி

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினரான செல்வி அம்பிகா சற்குணநாதன் தமது பதவியில் இருந்து விலகியுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், இணை அனுசரணை வழங்கிய தீர்மானத்திலிருந்து இலங்கை வெளியேறியமையை ஆட்சேபித்தே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இருந்து அவர் பதவி விலகியுள்ளார்.

ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட இந்த ஆணைக்குழுவின் தலைவர் உட்பட நால்வர் பெண்கள். தமிழர் அம்பிகா மாத்திரமே. அவர் இந்த ஆணக்குழுவின் இரண்டாவது ஐந்து ஆண்டுகள் பதவிக்காலத்தின் மத்தியிலேயே அதனை இடைநடுவில் துறந்திருக்கின்றார்.

பதவி துறந்திருக்கும் அம்பிகா சற்குணநாதன் பொதுத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராகப் களமிறங்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழரசுக் கட்சியின் சார்பில் களமிறங்கம் இரண்டு பெண் வேட்பாளர்களில் இவரும் ஒருவர் என கூட்டமைப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன