பக்கங்கள்

பக்கங்கள்

20 மார்., 2020

மறைக்கும் சிறிலங்கா அரசு: சரத்+ராஜித தெரிவிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பின் உண்மை நிலை அரசாங்கம் தெரிவிப்பதை விட மோசமானதாகயிருக்கலாம் என ஐக்கியதேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜித சேனாரட்னவும் சரத்பொன்சேகாவும் தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர்களிடம் இன்று கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன இத்தாலியுடன் ஒப்பிடும்போது இலங்கையில் ஆரம்பநாட்களில் வெளியாகியுள்ள பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.

நிலைமை அடுத்த மாதம மேலும் தீவிரமடையலாம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளதை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாதிக்கப்பட்டுள்ளனர் என சந்தேகிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறித்து முரணான தகவல்கள் அரசாங்கத்திடமிருந்து வெளியாகின்றன என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் இந்த சூழல் மூலம் அரசியல் இலாபம் பெறுவதற்கு பதில் நிலைமையை கட்டுப்படுத்த முயலவேண்டும் என சரத் பொன்சேகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.