பக்கங்கள்

பக்கங்கள்

23 மார்., 2020

ஜேர்மனியை அடுத்து சுவிட்சர்லாந்தை நாடிய பிரெஞ்சு கொரோனா நோயாளிகள்

பிரான்ஸ் Alsace பிராந்தியத்தில் உள்ள சில கொரோனா நோயாதிகளை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க மூன்று சுவிஸ் மருத்துவமனைகள் ஒப்புக்கொண்டுள்ளன.

இருப்பினும், தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் சுவிட்சர்லாந்தின் சுகாதார உள்கட்டமைப்பு விரைவில் முடங்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

ரான்சின் Alsace பிராந்திய அதிகாரிகள் அவசர உதவிக்காக கோரிய நிலையில், தலா இரண்டு பிரெஞ்சு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக பாசலில் இரண்டு மருத்துவமனைகள் மற்றும் வடமேற்கு சுவிட்சர்லாந்தில் உள்ள ஜூராவில் ஒரு மருத்துவமனை நிர்வாகமும் தெரிவித்துள்ளன.

Alsace பிராந்தியத்தில் கடந்த மாதம் முன்னெடுக்கப்பட்ட தேவாலய கூடுகை ஒன்றே அந்த பிராந்தியத்தில் கொரோனா பாதிப்பை அதிகரிக்க காரணம் என கூறப்படுகிறது.


ஒற்றுமை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றின் உணர்வில் உதவி வழங்குவதாகக் கூறும் சுவிஸ் மருத்துவமனைகளுடன் ஜேர்மனியில் உள்ள மருத்துவமனைகளும் பிரெஞ்சு கொரோனா நோயாளிகளுக்கு உதவிகளை வழங்கி வருகின்றன.

இதனிடையே சுவிட்சர்லாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,500-ஐ நெருங்கியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 611 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஒரே நாளில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 18 பேர் பலியாகியுள்ள நிலையில், இதுவரை மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 98 என அதிகரித்துள்ளது.

இருப்பினும் அடுத்த சில வாரங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது அதிகரிக்கும் என்றே நிபுணர்கள் தரப்பு அச்சம் தெரிவித்துள்ளது.