பக்கங்கள்

பக்கங்கள்

27 மார்., 2020

யாழ். குடாநாட்டில் பிரதேச ரீதியாக ஊரடங்கை நீக்குவதற்கு யோசனை

கடந்த செவ்வாய்க்கிழமை தொடக்கம் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டத்தை பிரதேச ரீதியாக வெவ்வேறு நேரங்களில் தளர்த்துவது தொடர்பாக, யாழ். மாவட்ட செயலகத்தினால் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

யாழ்ப்பாணத்தில் இன்று காலை 6 மணிக்கு ஊரடங்குச் சட்டம் நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட போதும், மறு அறிவித்தல் வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீக்கப்படும் நேரத்தில் மக்கள் ஒன்று கூடுவதை தடுக்கவே, இவ்வாறு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், யாழ்ப்பாணக் குடாநாட்டின் ஒவ்வொரு பிரதேசங்களிலும் ஒவ்வொரு நேரம் ஊரடங்கை தளர்த்துவதன் ஊடாக மக்கள் கூட்டம் கூடுவதைத் தடுக்க முடியும் என்பதால், ஒவ்வொரு இடத்திலும் ஊரடங்கை வெவ்வேறு நேரங்களில் தளர்த்துவது தொடர்பான பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.