பக்கங்கள்

பக்கங்கள்

11 ஏப்., 2020

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது
உலகளவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக நாடுகள் விழி பிதுங்கி நிற்கின்றன. கொரோனா வைரசுக்கு இன்னும் தடுப்பு மருந்துகள் கண்டறியப்படாததால், உலகின் பல்வேறு நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. எனினும், கொரோனா தாக்கத்தின் வீரியம் குறைந்தபாடில்லை. குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடுமையாக உள்ளது.


கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,638,216 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 369,017- ஆக உள்ளது. ஒரே நாளில் அமெரிக்காவில் 1,152 பேரும், பிரிட்டனில் 953 பேரும் பலியாகியுள்ளனர்.