பக்கங்கள்

பக்கங்கள்

23 ஏப்., 2020

1500 பிரெஞ்சு இராணுவத்தினருக்கு கொரோனா தொற்று.

1500 பிரெஞ்சு இராணுவத்தினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ அமைச்சம் இத்தகவலை இன்று வெளியிட்டுள்ளது. பிரான்சில் கொரோனா தொற்றினால் 159,877 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 21,340 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களில் 1,500 பேர் இராணுவத்தினர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் 1,000 பேர் Charles de Gaulle விமான தாங்கி கப்பலில் பயணித்த இராணுவ வீரர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மொத்த இராணுவத்தினரில் 15 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.