பக்கங்கள்

பக்கங்கள்

8 ஏப்., 2020

பிரான்ஸ் நகரில் 2 நிமிடங்களுக்கு மேல் பெஞ்சுகளில் அமர தடை! புதிய விதிகளை கடைப்பிடிக்காதவர்களுக்கு 1,500 யூரோ வரை அபராதம்

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பிரான்ஸ் புதிய கடுமையான நடவடிக்கைகளை அறிவித்து வருகிறது.

நாட்டின் இறப்பு எண்ணிக்கை 10,000-ஐ தாண்டியதால் புதிய விதிகள் நடைமுறைக்கு வந்தன.

தேசிய ஊரடங்கு நடவடிக்கைகள் மாறவில்லை, ஆனால் சில இடங்களில் கடுமையான நடவடிக்கைகள் உள்ளன.

கடலோர நகரமான பியாரிட்ஸில் இரண்டு நிமிடங்களுக்கு மேல் பெஞ்சுகளில் அமர தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை முதல் பாரிஸ் நகரில் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை வெளியில் தனிப்பட்ட விளையாட்டு நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்டுள்ளன.

தெற்கு பாரிஸ் புறநகரில் உள்ள ஸ்கோக்ஸ் நகரத்தின் மேயரான பிலிப் லாரன்ட், வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் மூக்கு மற்றும் முகங்களை மறைக்கக் கட்டளையிட்டதாக அறிவித்தார்.