பக்கங்கள்

பக்கங்கள்

16 ஏப்., 2020

சுவிஸ் பல்பொருள் அங்காடிகள் சமூக விலகலை உறுதி செய்வதற்காக புதிய தொழில்நுட்பம் அறிமுகம்

சுவிஸ் பல்பொருள் அங்காடிகள், சமூக விலகலை உறுதி செய்வதற்காக தானியங்கி கருவி ஒன்றை அறிமுகம் செய்துள்ளன.

Migros, Aldi மற்றும் Lidl ஆகிய பல்பொருள் அங்காடிகள், கடைக்குள்ளிருக்கும் மக்களின் எண்ணிக்கையை அறியும் மென்பொருள் ஒன்றை அறிமுகம் செய்துள்ளன.

குறிப்பிட்ட எண்ணிக்கையில் மக்கள் கடைக்குள் வந்ததும், இந்த மென்பொருள் மேலும் மக்கள் கடைக்குள் நுழைவதை தடுக்கும்.

கடைக்குள் மக்கள் நுழையும் வாயில் மற்றும் வெளியேறும் வாயில் ஆகிய இடங்களில் தானியங்கி சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன.


அதில் எரியும் பச்சை விளக்கு உள்ளே செல்லலாம் என மக்களை அனுமதிப்பதோடு, மக்கள் எண்ணிக்கை அதிகமாகும்போது, சிவப்பு விளக்கு எரிந்து மேலும் மக்கள் கடைக்குள் நுழைவதை தடை செய்கிறது.

இதனால் மக்கள் கூட்டம் அதிகரித்து விடுமோ என்று கவலைப்பட தேவையின்றி பல்பொருள் அங்காடி ஊழியர்கள், தங்கள் வாடிக்கையாளர்கள் மீது கவனம் செலுத்த முடியும்.