பக்கங்கள்

பக்கங்கள்

17 ஏப்., 2020

பிரித்தானியாவில் டாக்ஸி சாரதியாக பணியாற்றிய இந்தியத் தமிழர் கொரோனாவால் பலி

பிரித்தானியாவில் வாடகை டாக்ஸி சாரதியாக பணியாற்றிய தமிழர் கொரோனாவால் பலியான சம்பவம் அவரது குடும்பத்தாரை உலுக்கியுள்ளது.

ஹீத்ரோ விமான நிலையத்திற்கு பயணி ஒருவரை அழைத்துச் சென்ற பின்னரே அவர் கொரோனாவுக்கு இலக்கானதாக அவரது நண்பர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பெங்களூரு நகரத்தை சேர்ந்த தமிழர் 45 வயதான ராஜேஷ் ஜெயசிலன் என்பவரே கொரோனாவுக்கு இலக்காகி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்தவர்.
இவருடன் கடந்த 8 ஆண்டுகளாக நண்பு பாராட்டிவரும் சுனில் குமார் என்பவரே குறித்த தகவலை, இந்தியாவில் உள்ள ராஜேஷின் குடும்பத்தாருக்கு தெரிவித்துள்ளார்.
பெங்களூரு நகரில் இருந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் பிரித்தானியா சென்றுள்ள ராஜேஷ் ஜெயசீலன், கடந்த சில ஆண்டுகளாக தனியார் நிறுவனம் ஒன்றில் வாடகை டாக்ஸி சாரதியாக பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் மார்ச் 25 ஆம் திகதி ஹீத்ரோ விமான நிலையத்திற்கு சென்று திரும்பிய பின்னர் அவர் கொரோனா அறிகுறிகளுடன் காணப்பட்டதாக சுனில் குமார் தெரிவித்துள்ளார்.
அவரது நிலை நாளுக்கு நாள் மிகவும் மோசமடைந்த நிலையில், இந்தியாவில் உள்ள குடும்பத்தாருடன் வீடியோ அழைப்பில் பேச சுனில் குமார் உதவியுள்ளார்.
இந்த நிலையில் இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையான ராஜேஷ் ஜெயசீலன் சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 11 ஆம் திகதி இறந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இரவு பகல் பாராமல் உழைக்கும் குணம் கொண்ட ராஜேஷ் ஜெயசீலன், சமீப காலமாக தமது வாடகை குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்பட்டு தமது காரிலேயே தூங்கி வந்துள்ளார்.
ராஜேஷின் இரண்டு பிள்ளைகளுக்கும் உதவும் பொருட்டு, தற்போது சுனில் குமார் பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டி வருவதாக கூறப்படுகிறது.