பக்கங்கள்

பக்கங்கள்

16 ஏப்., 2020

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு மத்தியில் பள்ளிகளை மீண்டும் திறந்த டென்மார்க்

கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் டென்மார்க் ஒரு மாத கால மூடலுக்குப் பிறகு பள்ளிகளை மீண்டும் திறந்துள்ளது.

கொரோனா பரவுவதை தடுக்க எல்லைகளை மூடுவது, நீடித்த தனிமைப்படுத்தல்கள் மற்றும் சமூக இடைவெளிகளை அறிமுகப்படுத்துவது என உலக நாடுகள் கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுத்து வருகிறது.

அந்த வரிசையில் மார்ச் 12ம் திகதி முதல் கிட்டதட்ட ஒரு மாத காலம் மூடப்பட்டு கிடக்கும் பள்ளிகளை மீண்டும் திறக்கத் தொடங்கியுள்ளது டென்மார்க்.

கொரோனாவுக்கு மத்தியில் ஐரோப்பாவில் பள்ளிகளை திறக்கும் முதல் நாடு என்ற பெருமையைப் பெற்றுள்ளது டென்மார்க்.

நர்சரிகள், மழலையர் பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன என்று அறிவிக்கப்பட்டுள்ளது