பக்கங்கள்

பக்கங்கள்

13 ஏப்., 2020

கொரோனா தொடர்பில் ஜேர்மனியில் இருந்து வெளியாகும் மகிழ்ச்சியான செய்தி

ஜேர்மனியில் கொரோனா தொடர்பில் சமீபத்தில் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையை விட, ஏற்கனவே பாதிக்கப்பட்டு குணமடைபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜேர்மனியில் ஞாயிறு பகல் வெளியிடப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் இதுவரை 120,479 பேர் கொரோனா பாதிப்புக்கு இலக்காகியுள்ளனர்.

ராபர்ட் கோச் நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகள் அடிப்படையில் இது முந்தைய நாள் வெளியான எண்ணிக்கையில் இருந்து 2,821 அதிகமாகும்.

மேலும் கொரோனா பாதிப்புக்கு இலக்காகி சிகிச்சை பலனின்றி இதுவரை 2,673 பேர் மரணமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், ராபர்ட் கோச் நிறுவனத்தின் மதிப்பீடுகளின்படி, ஜேர்மனியில் சுமார் 60,200 பேர் இதுவரை கொடிய கொரோனா தொற்றுநோயிலிருந்து தப்பியுள்ளனர்.


இதனால், ஜேர்மனியில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57,606 என தெரியவந்துள்ளது.

ஆனாலும், உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கக்கூடும் என்கின்றனர் ராபர்ட் கோச் நிறுவனத்தினர்.

ஏனென்றால் பல லேசான அல்லது அறிகுறியற்ற நோயாளிகள் தொடர்பில் சோதனைகளுக்கு பின்னர் பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

ஆயினும்கூட, கொடிய கொரோனாவில் இருந்து மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முதன்முறையாக பாதிக்கப்பட்டவர்களை விட அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.