பக்கங்கள்

பக்கங்கள்

23 ஏப்., 2020

அவதானம்! - மாகாணம் விட்டு மாகாணம் செல்ல தடை
பிரான்சில் ஒரு மாகாணத்தில் இருந்து இன்னொரு மாகாணத்துக்குச் செல்ல தடை விதிக்கப்பட உள்ளது.
இந்த புதிய சட்டம் மே மாதம் 11 ஆம் திகதி நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. ஒரு மாகாணத்தில் இருந்து இன்னொரு மாகாணத்துக்குச் செல்ல தடை விதிக்கப்பட உள்ளதாகவும், குறிப்பிட்ட சிலருக்கு (மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவ உதவியாளர்கள்..) மாத்திரமே அனுமதி அளிக்கப்பட உள்ளது.
<<போக்குவரத்துக்களை மட்டுப்படுத்துவது அவசியமாகின்றது. இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அது வழிவகுக்குறது>> என பிரதமர் எத்துவா பிலிப் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருந்தார்.
நேற்று இது தொடர்பாக அமைச்சர்களிடையே கலந்தாலோசிப்பு ஒன்று இடம்பெற்றது. இதில் உறுதியான முடிவுகள் எட்டப்படவில்லை. இருப்பினும் மே 11 ஆம் திகதியின் பின்னர் மாகாணங்களுக்கிடையேயான போக்குவரத்து நிறுத்தப்படும் என அறிய முடிகிறது.