பக்கங்கள்

பக்கங்கள்

21 ஏப்., 2020

பிரான்சில் லாக் டவுன் நேரத்தில் வெடித்த வன்முறை: பட்டாசுகளை வெடித்து எதிர்ப்பு தெரிவித்த மக்கள்

பாரீஸ் புறநகர் பகுதி ஒன்றில் லாக் டவுன் நேரத்தில் சிறுபான்மையினர் பயங்கரமாக தாக்கப்பட்டதாக கூறி மக்கள் வன்முறையில் இறங்கினர்.

30 வயதுடைய ஒருவருடைய மோட்டார் சைக்கிள் மீது பொலிஸ் வாகனம் ஒன்று மோதியதில் அவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட நபர் ஒரு அரேபிய இஸ்லாமிய பின்னணியைக் கொண்டவர்.

பொலிசார் சிறுபான்மையினருக்கு எதிராக மோசமாக நடந்துகொள்வதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம் என்று பாதிக்கப்பட்டவரின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து Villeneuve-la-Garenne என்ற பகுதியில் வெடித்த வன்முறை, அருகிலுள்ள மற்ற பகுதிகளுக்கும் பரவியுள்ளது.