பக்கங்கள்

பக்கங்கள்

12 ஏப்., 2020

மக்களிடம் மன்னிப்பு கேட்டார் பிரித்தானிய உள்துறை அமைச்சர்! பாதுகாப்பு உபகரண பற்றாக் குறை குறித்து விளக்கம்

பிரித்தானியாவில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போன்றோருக்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் போதுமானதாக இல்லை என்று குற்றச்சாட்டு நிலவி வரும் நிலையில், நாட்டின் உள்துறை அமைச்சர், இதற்கு மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக பிரித்தானியாவில் நோயாளிகள் மட்டுமின்றி, சிகிச்சையளித்து வந்த சில மருத்துவர்களும் இந்த நோயின் தாக்கம் காரணமாக உயிரிழந்தனர்.

போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததே இதற்கு காரணம், அரசு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குற்றச்சாட்டு எழுந்து வந்தது.