பக்கங்கள்

பக்கங்கள்

16 ஏப்., 2020

அனுமதியளிக்கப்படாத வர்த்தக நிலையங்கள் திறக்கப்படுமானால் 'சீல்”

கொராேனா அச்சுறுத்தல் காரணமாக முன்னெடுக்கப்படும் ஊரடங்கு தளர்த்தப்படும் காலத்தில் அனுமதியளிக்கப்படாத வர்த்தக நிலையங்கள் திறக்கப்படுமானால் அவற்றினை சீல் வைக்கவேண்டிய நிலையேற்படும் என மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் எச்சரித்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகர சபையில் நெற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

எனவே அறிவுறுத்தல்களுக்கு அமைய தங்களது வியாபாரங்களை மேற்கொள்ள வேண்டும் என வர்த்தக சமுகத்தினரைக் கேட்டுக்கொள்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.