பக்கங்கள்

பக்கங்கள்

16 ஏப்., 2020

கனடாவில் கணிப்பை விட அதிக உயிரிழப்பு - அதிகாரிகள் அதிர்ச்சி

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, சடுதியாக 1000ஐக் கடந்துள்ளது.
கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, சடுதியாக 1000ஐக் கடந்துள்ளது.

நேற்று புதன்கிழமை மாலை வரை, 1010 பேர் கனடா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்திருப்பதாக, கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி தெரேசா டாம் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், 500இற்கும் 700இற்கும் இடைப்பட்டவர்களே உயிரிழக்கக் கூடும், என்று முன்னதாக கனேடிய சுகாதார அதிகாரிகள் கணித்திருந்தனர். ஆனால், அதற்கு மாறாக, ஏப்ரல் 15ஆம் திகதியே இறப்பு எண்ணிக்கை 1000ஐக் கடந்துள்ளது.

தொற்று பரவும் வேகம் குறைந்திருந்தாலும், இறப்பு வேகம் சடுதியாக அதிகரித்துள்ளது. செவ்வாய் மற்றும் புதன்கிழமை மாத்திரம் 100இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.