பக்கங்கள்

பக்கங்கள்

29 ஏப்., 2020

எந்தெந்த வர்த்தக நிலையங்கள் திறக்கலாம் - முகக்கவசம் அத்தியாவசியமா?

மே 11 இலிருந்து எந்த விதமான வர்த்தக நிலையங்கள் திறக்கலாம் என்பது தொடர்பாக பிரதமர் எதவார் பிலிப் அறிவித்துள்ளார்.மே பதினொன்றில் இருந்து, உணவகங்கள், அருந்தகங்கள் (cafés, Bar, restaurant) தவிர்ந்த அனைத்து வர்த்தக நிலையங்களும் திறக்கலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வர்த்தக நிலையங்களிற்குள் செல்வதற்கு முகக்கவசங்கள் கட்டாயமில்லை, ஆனால் அணிவது பாதுகாப்பானது. அதே நேரம், எந்த வர்த்தக நிலையங்களிற்கும், விரும்பினால், முகக்கவசம் இன்றி உள் நுழைபவரை தடை செய்து வெளியேற்றும் உரிமை வழங்கப்பட்டு உள்ளது.

சந்தைகள் (Marché) சுகாதாரப் பாதுகாப்பு, பாதுகாப்பு இடைவெளி என்பவற்றை உறுதி செய்து, மே 11 முதல் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சந்தையில் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது சாத்தியமில்லை எனக் கருதினால், அந்தச் சந்தையை மாநகர முதல்வரோ, மாவட்ட ஆணையரோ தடை செய்யலாம்.
மாநகரசபை முதல்வர்களிற்கும், மாவட்ட ஆணையர்களிற்கும் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
நிகழ்வு மண்டபங்கள், திரையரங்குகள், போன்றவை அனைத்தும் தொடர்ந்தும் மூடப்பட்டே இருக்கும். செப்பெடம்பர் மாதமளவிலேயே இவை பற்றி விவாதிக்கப்படும்.
உணவகங்கள், அருந்தகங்கள் திறப்பது தொடர்பாக, தொற்றுப் பரவல் நிலைமையைக் கருத்திற்கொண்டு ஜுன் மாதத்தில் அலோசிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.