பக்கங்கள்

பக்கங்கள்

27 மே, 2020

சீனாவிலிருந்து இந்தியாவுக்கு உளவு பார்க்க அனுப்பப்பட்ட புறா ? மடக்கிப் பிடித்தது இந்திய பொலிஸ்

சீன – இந்திய லடாக் எல்லைப்பகுதியில் போர் பதட்டம் எழுந்துள்ள நிலையில் உளவு பார்க்க இந்தியாவிற்குள் புறா வந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக லடாக் எல்லைப்பகுதியில் சீன – இந்திய இராணுவங்களுக்கு இடையே போர் பதட்டம் எழுந்துள்ளது.

மே 5 அன்று இருநாட்டு படைகளிடையே சிறு மோதல் எழுந்த நிலையில், தற்போது சீன படைகள் எல்லைப் பகுதியில் பதுங்கு குழிகள் அமைத்தல் போன்ற செயல்பாடுகளில் இறங்கியுள்ளன.

இந்தியாவும் தனது இராணுவத்தை எல்லைப் பகுதியில் குவித்து வருகிறது.

இந்நிலையில் லடாக் இந்திய எல்லைப்பகுதியில் அடையாள எண்களுடன் புறாக்கள் சில பறந்து வந்துள்ளன. அவற்றை பிடித்த லடாக் பொலிஸார் இராணுவத்திடம் இதுகுறித்து தெரிவித்துள்ளனர்.

அடையாள எண்கள் இடப்பட்ட புறாக்கள் சீனாவிலிருந்து உளவு பார்க்க அனுப்பப்பட்டவையாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இதனால் எல்லையில் நாளுக்கு நாள் பதட்டம் மேலும் அதிகரித்து வருகிறது.