பக்கங்கள்

பக்கங்கள்

11 மே, 2020

www.pungudutivuswiss.com
புதிய போக்குவரத்து நடைமுறைகளின் படி வடக்கு மாகாணத்துக்குள் உள்ளடங்கும் அனைத்து மாவட்டங்களுக்கிடையில் அனைவரும்
சென்றுவரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய மாவட்டங்களுக்கிடையில் குறிப்பாக ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள மாவட்டங்களான கொழும்பு , கம்பகா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களிற்கு தகுந்த ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணங்கள் இருந்தால் மட்டுமே பயணிக்க அனுமதி வழங்கி கிராம அலுவலர்கள் சிபார்சு செய்யலாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

ஆயினும் எந்த மாவட்டத்துக்கு செல்லவேண்டும் என்றாலும் பிரதேசத்தின் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சுகாதார சான்றிதழ் அவசியம் தேவையெனவும் பயணிக்க விரும்பும் அனைவரும் தமது பகுதி கிராம அலுவலர் ஊடாக அச்சான்றிதழுக்கு விண்ணப்பிக்கமுடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது