பக்கங்கள்

பக்கங்கள்

3 மே, 2020

www.pungudutivuswiss.com
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 1435 பேர் பலி


ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. ஆனால் அமெரிக்காவில் இன்னும் குறையவில்லை. தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 1435 பேர் உயிரிழந்துள்ளனர்.


இதுவரை 11 லட்சத்து 32 ஆயிரத்து 512 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 66 ஆயிரத்து 368 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 382 பேர் குணமடைந்துள்ளனர். அமெரிக்கா இதுவரை 68 லட்சத்து 16 ஆயிரத்து 347 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்துள்ளது. ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.