பக்கங்கள்

பக்கங்கள்

2 ஜூன், 2020

கட்டுநாயக்க வரும் அனைவருக்கும் பிசிஆர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும், இன்று தொடக்கம், பிசிஆர் பரிசோதனை நடத்தப்படும் என்று அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

விமான நிலைய வளாகத்துக்குள் நடத்தப்படும் இந்தப் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், இலங்கைக்கு வரும் விமானப் பயணிகள் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அல்லது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

கொரோனா தொற்றை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியினால் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமையவே, இந்த செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வரும் ஓகஸ்ட் மாதம் சுற்றுலாப் பயணிகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்படவுள்ளதாகவும், இலங்கைக்கு வரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும் பிசிஆர் சோதனைகள் நடத்தப்படும் என்றும் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.