பக்கங்கள்

பக்கங்கள்

22 ஜூன், 2020

வாக்குறுதியில் இருந்து விலகியது இலங்கை! - ஐரோப்பிய ஒன்றியம் குற்றச்சாட்டு.

Jaffna Editor
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பான இலங்கை வழங்கியிருந்த வாக்குறுதியில் இருந்து விலகிச் சென்றுள்ளதாக, ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
2019ஆம் ஆண்டுக்கான, மனித உரிமைகள் மற்றும் உலகில் ஜனநாயகம் தொடர்பாக, ஐரோப்பிய ஒன்றியத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பான இலங்கை வழங்கியிருந்த வாக்குறுதியில் இருந்து விலகிச் சென்றுள்ளதாக, ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. 2019ஆம் ஆண்டுக்கான, மனித உரிமைகள் மற்றும் உலகில் ஜனநாயகம் தொடர்பாக, ஐரோப்பிய ஒன்றியத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி .சலுகையை மீளப் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளின் போது, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக, இலங்கை அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த வாக்குறுதியில் இருந்து இலங்கை பின்வாங்கியிருப்பதாகவும், ஐரோப்பிய ஒன்றியம் குற்றம்சாட்டியுள்ளது.

புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் அவரது இடைக்கால அரசாங்கமும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதில்லை என்ற கொள்கைத் தீர்மானத்தை எடுத்திருப்பதாகவும், ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.