பக்கங்கள்

பக்கங்கள்

20 ஜூன், 2020

வஞ்சிக்கப்படும் நயினாதீவு செல்லும் அடியார்கள்

பயணிகளுக்கு விதி மீறிய தடை .நயினாதீவில் அம்மன் அடியார்கள் திட்டமிட்டு வஞ்சிக்கப்படுகின்றனர் .

வடக்கில் கொரோனா ஆபத்து என்பது துளியுமில்லை . ஆனால் கொரோனா ஆபத்து நிலவுகின்ற தென்னிலங்கையிலிருந்து சில நாட்களுக்கு முன்பு நூற்றுக்கணக்கான பௌத்த பிக்குகள் , பக்தர்கள் சுதந்திரமாக நயினாதீவுக்கு வந்து விகாரையில் வழிபட்டுச்சென்றிருந்தனர் .
இந்த ஆட்சியில் பங்காளர்களாக இருக்கின்ற டக்ளசு , அங்கஜன் போன்றவர்கள் நினைத்திருந்தால் இப்பிரச்சினையை முன்கூட்டியே எளிதாக தீர்த்திருக்கமுடியும் . இனி நாடகம் போட்டு வேலையில்லை . நயினாதீவு மக்களே இனியுமா நீங்கள் ?
குறிப்பு - 2017 ல் நடைபெற்றிருந்த வேலணை பிரதேச சபை தேர்தலில் நயினாதீவிலுள்ள இரண்டு தேர்தல் வட்டாரங்களிலும் ஈபிடிபியே வெற்றிபெற்றிருந்தது . சபை தவிசாளரும் நயினாதீவினை சேர்ந்தவரே . 1998 - 2002 வரையும் அந்த நபரே தவிசாளராக செயற்பட்டார் .www.pungudutivuswiss.com