பக்கங்கள்
▼
பக்கங்கள்
▼
31 ஜூலை, 2020
இது கூட்டமைப்பு - உட்கட்சி ஜனநாயகம் .கட்சிக்குள்ளேயே யாரும் யாரையும் விமர்சிக்கலாம் . யாரும் சுயமாக வெளியேறலாம் . வெளியேறியவர்கள் பாராளுமன்ற பிரதேச சபை மாநகரசபை மாகாண சபை உறுப்பினராக இருந்தால் கூட உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படமாடடாது கால அவகாசம் மீண்டும் இணையலாம் பெரிய பதவியை அலங்கரித்தால் கட்சியை உறுப்பினர்களை என் தலைமையையே விமர்சிக்கலாம் உதாரணம் வியாழேந்திரன் , விக்கினேஸ்வரன் .வளர்த்த கடாக்களே நெனசில் மிதிக்கலாம் . பற்றைக்குள் கிடந்தாலும் தூக்கி மெத்தையில் வளர்க்கலாம் விரும்பினால் பற்றைக்குள் ஓடலாம் (விக்கி ). முகவரி இல்லாதவர்கள் இங்கே வந்து முகவரி தேடிக்கொண்டு வெளியேறலாம் . முகவரி கொங்சம் கிடைத்ததும் பெரிய பதவிக்காக ஆசைப்பட்டு துரோகம் செய்யலாம் (அனந்தி ). மாற்றுக்கூடடணி அமைக்கலாம் கட்சிக்குள் இருந்து கொண்டே இத்தனையும் செய்யலாம்(விக்கி ) . கூட்டமைப்பு முகவரி பெற்ற பின் தான் வெளியேறினால் தான் அரசியல் செய்யலாம் தாங்களாகவே அடிமடட தொண்டனாக இருந்து கட்சி ஆரம்பிக்க தேவையில்லை சொந்தக்காசை செலவழிக்காது பிழைத்துக்கொள்ளலாம் ( ஸ்ரீகாந்தா , சிவாஜி,கஜேந்திரன் கஜன் ,பிரேம் )