பக்கங்கள்

பக்கங்கள்

14 ஜூலை, 2020

அனலைதீவுக்கு வந்தவருக்கு கொரோனா அறிகுறி!

Jaffna Editor
பொலன்னறுவவில் இருந்து அனலைதீவுக்கு வந்த ஒருவர் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


பொலன்னறுவவில் இருந்து அனலைதீவுக்கு வந்த ஒருவர் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எழுவைதீவில் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையில், பணியாற்றுவதற்காக, பொலன்னறுவவில் இருந்து வந்தவருக்கே கொரோனா அறிகுறிகள் காணப்படுகின்றன.

கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் வந்த இவர் தொற்று அறிகுறிகளை அடுத்து எழுவைதீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இவருக்கு பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதும், அதுதொடர்பான முடிவு இன்னமும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், எழுவைதீவில் குறித்த கொரோனா தொற்று சந்தேக நபருடன் பழகியவர்களை சுய தனிமைப்படுத்த சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.