பக்கங்கள்

பக்கங்கள்

7 ஜூலை, 2020

முல்லைத்தீவில் ஸ்ரீலங்கா விமானப்படையினர் மீது இளைஞர்கள் தாக்குதல்

Jaffna Editor
முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படைத்தள படையினர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

நேற்று மாலை முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப் படைத்தளத்தினை சேர்ந்த இரண்டு விமானப்படையினர் சூரிபுரம் பகுதியில் பாதுகாப்பு கடமைகள் நிமிர்த்தம் கிராமத்திற்குள் சென்ற போது அங்கு கூடி நின்ற இளைஞனர்களுக்கும் விமானப்படையினருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்கம் கைகலப்பாக மாறியுள்ளது.

இளைஞர்கள் சிலர் இரண்டு விமானப்படையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இதன் போது காயமடைந்த 35 அகவையுடைய விமானபடை வீரர் ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தினை தொடர்ந்து முள்ளியவளை பொலிசார் விமானப்படையினர் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள் இருவரை கைது செய்துள்ளார்கள். இவர்களை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முள்ளியவளை பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.