பக்கங்கள்

பக்கங்கள்

10 ஜூலை, 2020

Jaffna Editor  இது எப்பிடி  இருக்கு
சம்பந்தனை தோற்கடிப்பார் ரூபன் - மட்டக்களப்பிலும் 2 ஆசனம் கிடைக்கும்
திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர் ரூபன் தோற்கடிப்பார் என்று அந்தக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு - கிழக்கில் தமது கட்சிக்கு அமோக ஆதரவு இருக்கிறது என்பதை, மக்களை நேரில் சந்தித்த பின்னரே வெளிப்பட்டுள்ளதாகவும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை தோற்கடிக்க கூடியளவுக்கு, தமது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரூபனுக்கு ஆதரவு இருப்பதாகவும், அவர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பிலும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர் வெற்றிபெறக் கூடியளவுக்கு மக்கள் ஆதரவு இருப்பதாகவும், அங்கு இரண்டு ஆசனங்களை பெறமுடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்