பக்கங்கள்

பக்கங்கள்

16 ஆக., 2020

கூட்டமைப்பின் பின்னடைவை விரிவாக ஆராய குழுதேசியப் பட்டியல் எம்.பி. நியமனம் குறித்துதுரைராஜசிங்கத்தின் வழமையான மழுப்பல் நழுவல் பதில்கள

Jaffna Editorபொதுத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஏற்பட்ட பின்னடைவுகளை விரிவாக, நடுநிலையாக, ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு கட்சி சார்பற்ற ஐந்து பிரமுகர்களைக் கொண்ட குழு ஒன்றை நியமிப்பது என்றும், அந்தக் குழுவின் அறிக்கையைப் பரிசீலித்து அதனடிப்படையில் அடுத்த கட்டம் குறித்துத் தீர்மானிப்பது என்றும் இன்று திருகோணமலையில் கூடிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல்குழு தீர்மானித்தது.

நேற்று நண்பகல் சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு இரா.சம்பந்தன் தலைமை வகித்தார். பெரும்பாலும் அரசியல் குழு உறுப்பினர்கள் எல்லோரும் பங்குபற்றினர். எதிர்பார்த்த குழப்பம் ஏதும் கூட்டத்தில் இடம்பெறவில்லை. கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா ஆரம்பத்தில் தேசியப் பட்டியல் எம்.பி. நியமனம் குறித்து உரையாற்றினார்

அந்த நியமனம் அம்பாறையின் கலையரசனுக்கு வழங்கியது தவறல்ல என்று கூறிய அவர், ஆனால் அது வழங்கிய முறைமை தவறு என்று குறை கூறினார். அவரது குற்றச்சாட்டு செயலாளர் மீது இருந்தது. ஆனால் செயலாளர் துரைராஜசிங்கம் அதற்குப் பதிலளித்து, மோதலில் ஈடுபடாமல் தவிர்த்துக் கொண்டார்.வழமை போல் செயலாளர் துரைராசசிங்கம் கே வி தவராசா, மாவையின் கேள்விகளுக்கு மழுப்பலாகவும் சமாளிப்புடனும் பதில் கூறி தப்பித்தார் . இது பற்றியும் அடுத்த மத்தியகுழு கூட் டத்தில் பேசுவோமென முடித்து வைக்கப்படாது துரைராஜசிங்கத்தின் வழமையான மழுப்பல் நழுவல் பதில்கள்