பக்கங்கள்

பக்கங்கள்

10 ஆக., 2020

கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து ரணில் விலகல்

Jaffna Editor
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க அக்கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளரென ஐ.தே.க செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
அதன்படி கட்சியின் அடுத்த தலைமைத்துவத்துக்காக ரவி கருணாநாயக்க, தயா கமகே, வஜிர அபேவர்தன ஆகியோர் உட்பட தனது பெயரும் முன்மொழியப்பட்டுள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.

சிறிகொத்தவில் இன்று (10) இடம்பெற்ற கட்சியின் விசேட கூட்டத்தின் போது இந்த தீர்மானத்தை ரணில் அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய தலைவராக யாரை தெரிவு செய்வது என்பது தொடர்பான தீர்மானம் எதிர்வரும் புதன்கிழமை எடுக்கப்படவுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன