பக்கங்கள்

பக்கங்கள்

2 செப்., 2020

தந்தையால் உருவாக்கப்பட்டு தாயால் வலுப்படுத்தப்பட்ட ஸ்ரீ.சு.கட்சியின் நிலை கண்டு கவலையடைகின்றேன்-சந்திரிகா

Jaffna Editor
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலையை பார்த்து கவலையடைவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

எனது தந்தையால் உருவாக்கப்பட்டு தாயாரால் வலுப்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிலையை கண்டு கவலையடைகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக தேர்தல்களில் தோல்வியடைந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை நான் வலுப்படுத்தினேன் என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் நாட்டை ஆட்சி செய்த காரணத்தினாலேயே சுதந்திரக்கட்சியினால் 23 வருடங்கள் தொடர்ந்து ஆட்சி புரிய முடிந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பலரின் வேண்டுகோள்கள் காரணமாக நான் மீண்டும் 2015 இல் அரசியலில் ஆர்வம் காட்டினேன்.

பலர் நான் ஐக்கியதேசிய கட்சியுடன் இணைந்துள்ளேன் என குற்றம்சாட்டினார்கள் என தெரிவித்துள்ள சந்திரிகா குமாரதுங்க பதவிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திரக்கட்சியை முற்றாக அழித்தார் எனவும் தெரிவித்துள்ளார்