பக்கங்கள்

பக்கங்கள்

21 செப்., 2020

கொழும்பிற்கு அழைத்து செல்லப்பட்டார் பிள்ளையான்

Jaffna Editor

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அழைக்கப்படும் நிவநேசதுரை சந்திரகாந்தன் நாளை நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்கான அனுமதியை

பெற்று இன்று மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் கடந்த 2015 ஒக்டோபர் 11 திகதி கைது செய்யப்பட்டு 4 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு படையில் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்புடன் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் நடந்து முடிந்த பொது தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

இந்த நிலையில் தடுப்புக்காவலில் இருந்து பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக இரண்டாவது தடவையாக அனுமதியை பெற்று சென்றுள்ள இவர் எதிர்வரும் 25 ம் திகதி வரை பாராளுடன்ற அமர்வில் கலந்து கொண்ட பின்னர் மீண்டும் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அழைத்து வரப்படுவார் என்றும் சிறைச்சாலை அதிகாரி தெரிவித்துள்ளார்.