பக்கங்கள்

பக்கங்கள்

22 அக்., 2020

20வது திருத்தத்திற்கு ஆதரவாக சுதந்திரக்கட்சி

20வதுதிருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது.ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் தயாசிறி ஜயசேகர இதனை தெரிவித்துள்ளார்.
நாளை 20வது திருத்தம் மூன்றில் இரண்டும் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

20வது திருத்தம் குறித்து நாரஹன்பிட்டியில் உள்ள பௌத்த மகாசங்கத்தினருடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர்.

மகாசங்கத்தினர் 20வது திருத்தம் குறித்த கருத்தினை தெரிவித்தனர் இதனை அரசாங்கத்திடம் தெரிவிக்கப்போவதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

20வது திருத்தம் குறித்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கரிசனைகளை அரச தலைவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்