பக்கங்கள்

பக்கங்கள்

25 அக்., 2020

’20’ க்கு ஆதரவளித்த எதிரணியினர் இருவருக்கு இராஜாங்க அமைச்சர் பதவி?

Jaffna Editor
சர்ச்சைக்குரிய அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்த எதிரணியைச் சேர்ந்த இருவருக்கு இராஜாங்க அமைச்சர் பதவிகள் வழங்கப்படலாம் என கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பிலிருந்து வெளிவரும் சிங்களப் பத்திரிகை ஒன்றும் இன்று இதனை உறுதிப்படுத்தியிருக்கின்றது.
20 ஆவது திருத்தத்துக்கு எதிரணியைச் சேர்ந்த எட்டு உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்திருந்தனர். இதில், தமிழ், முஸ்லிம் எம்.பி.க்கள் ஏழு பேர் என்பது கவனிக்கத்தக்கது.
இவர்களில் யார் யாருக்கு எவ்வாறான பதவிகளைக் கொடுப்பது என்பது குறித்தது அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் ஆராயப்பட்டுவருவதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன