பக்கங்கள்

பக்கங்கள்

25 அக்., 2020

வவுனியாவில் இடம்பெற்ற தமிழீழ விடுதலை இயக்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம்!

Jaffna Editorதமிழீழ விடுதலை இயக்கத்தின் மத்திய செயற்குழுவின் கூட்டம் ஒன்று வவுனியாவில் நேற்று(24)இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்தகூட்டத்தின் போது பல முக்கியமான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதவும் குறிப்பாக கட்சியில் இருந்து வெளியேறிய சிறிகாந்தா, சிவாஜிலிங்கம், கோடீஸ்வரன் ஆகியோர் வகித்த பொதுச்செயலாளர், தவிசாளர், உப பொருளாளர் பதவிகளிற்கு புதியவர்களை நியமிக்க கட்சி முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் விவகாரம் தொடர்பிலும் விரிவாக ஆர்யப்பட்டதாகவும் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் எமது
செய்திச்சேவைக்கு தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது .