பக்கங்கள்

பக்கங்கள்

4 அக்., 2020

உறவுகளே நீதிக்காக காத்திருங்கள் .நீங்கள் நீதிபதியாக வேண்டாம் 
------------------------------------------------------------------------------------------------------------
புங்குடுதீவில் மதகுரு கொலையை அடுத்து நின்றவன் போனவன்   எல்லாம் நீதிபதியாகி  தீர்ப்பு சொல்லி கொண்டிருக்கிறார்கள் .ஊடகம் இணையம் சமூகத்தளம் என்று ஆளாளுக்கு  சமூகத்தில் பெரியவனாக முகவரி கொண்டவர்கள்  எல்லாம்  தமக்கிருக்கும்  பகையை வைத்துக்கொண்டு  வேண்டப்படாதவர்களை  இழுத்து வைத்து கற்பனை செய்திகளை  பதிவி டுகிறார்கள் .அதுவும் வெளிநாட்டில் இருந்து கொண்டு  நேரில் பார்த்தவர்கள் போலவே  எழுதுகிறார்கள் .. முடிந்தால்  இலங்கை நீதித்துறைக்கு  உதவி  செய்யுமுகமாக நேரில் சென்று  வாக்கு மூலம்  கொடுத்துவிட்டு வாருங்கள் .சட் டம் நீதித்துறை , காவல்துறை  இருக்கிறது அது தம் கடமையை ஒழுங்காகவே  செய்கிறது.  நீங்கள்  திசை திருப்ப வேண்டிய அவசியம் என்ன .நீதி தீர்ப்பை வழங்கும் . அங்கெ  இருக்கும் இந்த  அரச துறைகளை விட நீங்கள்  இங்கே  இருந்துகொண்டு  நீதி பேசுவதில்  நியாயம்  இருக்கிறதா . கொலை  சந்தேகத்தில்    கைதானவர்கள் கொலை செய்யபடடவர்  யாருமே  எமது ஊரை சேர்ந்தவர்கள் இல்லை .  எமது ஊரவரான நீங்கள் ஏன் எமது ஊரின் பெயரை   உலகம் அறிய  அசிங்கப்படுத்துகிறீர்கள்.  நீதி  தீர்ப்பு சொல்லும்காத்திருங்கள் இணையம் ,முகநூல் ,ஊடகத்தை பிரபலப்படுத்தவோ உங்கள் பெயரை பிரபலப்படுத்தவோ உங்கள் கற்பனை கதைகளை  கட்டி  எழுப்பாதீர்கள்  ஊரின் பெயரால் குளிர் காயாதீர்கள்