பக்கங்கள்

பக்கங்கள்

18 அக்., 2020

நியூசிலாந்தில் இலங்கைப் பெண்ணுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்!


இலங்கைப் பெண்ணான வனுஷி வால்டர்ஸ் (Vanushi Walters) முதன்முறையாக நியூசிலாந்து பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.

இதனையடுத்து நியூசிலாந்து பாராளுமன்றத்தில் உறுப்பினராகும் இலங்கையில் பிறந்த முதல் நபராக இவர் உள்ளார்.

நியூசிலாந்தின், வடமேற்கு ஆக்லாந்தில் இடம்பெற்ற தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலும் இவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகியும், ஹாமில்டனுக்கான கிரிக்கெட் வீரருமான தேசிய வேட்பாளர் ஜேக் பெசன்ட் என்பரை எதிர்த்து போட்டியிட்டு வனுஷி வால்டர்ஸ் தெரிவாகியுள்ளார்.

இதில் பெசாண்டின் 12,727 வாக்குகளையும், வனுஷி வால்டர்ஸ் 14,142 வாக்குகளைப் பெற்றுள்ளனர்..

வனுஷி வால்டர்ஸ் தமது 5 வயதில் நியூசிலாந்திற்கு குடிபெயர்ந்துள்ளார், இவர் ஒரு மனித உரிமை வழக்கறிஞராகவும், மனித உரிமைகள் ஆணையகத்தின் மூத்த மேலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இதேவேளை நேற்று நடைபெற்று முடிந்த நியூசிலாந்து பாராளுமன்றத்தேர்தலில் தொழிலாளர் கட்சி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.

இதன்மூலம் நியூசிலாந்து பிரதமராக இருந்த ஜெசிந்தா ஆர்டன் மீண்டும் வெற்றி பெற்று பிரதமராகி உள்ளார்.